Menu

2024ல் சிறந்த Sony கேமரா எது? FX30 வாங்கலாமா? இல்ல A7SIII வாங்கலாமா? Candid வீடியோவிற்கு சிறந்த கேமரா எது?

2024ல் Candid Videography க்கு சிறந்த Sony கேமரா எது? சிறந்த Cinematography Camera எது என்று குழப்பம் இருக்கிறதா? அப்படியெனில் இது உங்களுக்கான பதிவு தான். Videography யில் updates நாளுக்கு நாள் முன்னேற்றம் காரணமாக, பலர் Sony பிராண்டை தேர்வு செய்கிறார்கள். சரி Sony யையே எடுக்கலாம்னு முடிவு பன்னிடோம்.

ஆனால், Sony யில் எந்த கேமரா வாங்குவது என்பது பற்றிய குழப்பம் கண்டிப்பாக அனைவருக்கும் இருக்கும். சிறந்த கேமரா வாங்குவதற்கு முன்னால், நம்ம எதற்காக அந்த கேமரா வாங்குகிறோம், நம்முடைய பயன்பாடு எப்படி இருக்கும் என்பதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

Candid Videography மற்றும் Cinematography

இப்போது நீங்கள் Candid Videography அல்லது Cinematography மட்டும் செய்யப்போகிறீர்களா? அப்படியெனில், அதில் சிறந்த கேமரா தேர்வு செய்வது மிகவும் எளிதாக இருக்கும். நீங்கள் Videography மட்டுமின்றி Photography யும் சேர்த்து செய்கிறீர்களா? அப்படியெனில், அதில் சிறந்த கேமராவை தேர்வு செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்.

நாம் இப்போது Candid Videography அல்லது Cinematography மட்டும் தேர்வு செய்பவர்களுக்கு எது சிறந்தது என்று பார்ப்போம்.

2024ல் சிறந்த Sony கேமரா எது? FX30 வாங்கலாமா? இல்ல A7SIII வாங்கலாமா? Candid வீடியோவிற்கு சிறந்த கேமரா எது?
Image Credit: Freepik

Sony FX30 மற்றும் Sony A7SIII

Sony FX30 மற்றும் Sony A7SIII ஆகிய இரண்டு கேமராக்கள் இப்போது மார்க்கெட்டில் மிகவும் பிரபலமாக உள்ளன. FX30 இரண்டு வருடம்தான் ஆகிறது, ஆனால் A7SIII கிட்டத்தட்ட நான்கு வருடம் ஆகிவிட்டது. வருடம் ஆகிவிட்டாலும், அது இன்னும் நல்ல கேமராவே.

Sony FX30

சினிமா சார்ந்த டெக்னிக்கல் மற்றும் 4K ரெக்கார்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டது. முழு 4K யில் 120 FPS வரைக்கும் நீங்கள் எடுக்க முடியும். இதில் high-quality microphones மற்றும் audio equipment ஐ connect செய்வதை எளிதாக்க XLR handle பொறுத்திக்கொள்ளலாம்.

சினிமாட்டிக் அற்புதம்: DSLR போன்ற தோற்றம் கொண்டதாக இருந்தாலும் இது நிச்சயமாக ஒரு cinematic features கொண்ட அற்புதமான camera. FX30 யின் முக்கியமான அம்சங்களில் ஒன்று Advanced Cine Log (Cine EI) ஆகும். இது base ISO setting இல் shooting செய்ய உதவுகிறது. இது higher dynamic range மற்றும் superior color grading flexibility ஐ வழங்குகிறது. இது post-production இல் முக்கியமான Grading செய்ய உதவும்.

உயர்ந்த தரமான காட்சிகள்: FX30 யில் high-quality footage with excellent detail ஐ உறுதி செய்கிறது. Fast-paced action மற்றும் smooth slow-motion videos எடுக்க இது மிகவும் உதவுகிறது.

FX30 யை பற்றி அறிய: Sony Official Website

சுமார் ₹200,000 விலையில், FX30 அதன் திறமையான அம்சங்களையும், குணாதிசயங்களையும் கொண்டுள்ளது. இது high-performance camera மற்றும் அதிக செலவினை தவிர்க்க விரும்பும் பயனாளர்களுக்கு சிறந்த தேர்வாகும். முக்கியமாக Candid Videographers க்கு மிகவும் பயன். FX30 யில் பயன்படுத்தப்படும் XAVC S codec compression யில் குறைந்த file size, high image quality யில் வழங்குகிறது. இது Candid videographers க்கு file size மற்றும் video quality இல் balance செய்ய உதவுகிறது. FX30 நல்ல battery life உடன் வருகிறது, இது நீண்ட நேரம் continuous shooting செய்ய உங்களுக்கு உதவுகிறது. FX30, அதன் lightweight மற்றும் compact design மூலம் எளிதில் portability ஐ வழங்குகிறது, இது வெளியிலோ அல்லது studioலோ சுயமாக எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் உதவும்.

Sony FX30 வாங்க: Buy at Amazon

Sony A7SIII

Full Frame DSLR Camera, இதில் photo வும் video வும் எடுக்க முடியும். இது APS-C sensor ஐ விட பெரியது. A7SIII வின் முக்கிய அம்சம் அதன் exceptional low-light performance ஆகும். இது dim lighting conditions இல் கூட clean மற்றும் noise-free footage ஐ shoot செய்யக்கூடியது. இது event videographers மற்றும் challenging lighting scenarios இல் வேலை செய்யும் filmmakers க்கு மிகவும் பிடித்தமானது.

விலை: சுமார் ₹4,00,000.

A7SIII யை பற்றி அறிய: Sony official website

A7SIII யில் Sony S-Log மட்டுமே உள்ளது, இது cine EI இற்கான support இல்லை என்பதால், Dynamic Range மற்றும் color grading இல் சில வரம்புகள் உள்ளன.

Sony A7SIII வாங்க: Buy at Amazon

முக்கிய வேறுபாடுகள்

SpecsFX30A7SIII
SensorAPS-CFull Frame
Lens MountSony-ESony-E
FPS240 in 1080×1920240 in 1080×1920
ViewfinderNoElectronic
MegaPixels26MP12MP
முக்கிய வேறுபாடுகள்

சிறந்த Sony கேமரா எது?

2024ல் சிறந்த Sony கேமரா எது? FX30 வாங்கலாமா? இல்ல A7SIII வாங்கலாமா? Candid வீடியோவிற்கு சிறந்த கேமரா எது?
Image Credit: Freepik

Candid Videography மற்றும் Short Films, Feature Films, அல்லது Documentary Films போன்ற வீடியோக்கள் நீங்கள் எடுப்பவர்களாக இருந்தால், குறைந்தது 4K 60fps resolution இருக்க வேண்டும். இதனால் வீடியோ மிகத் தெளிவாக இருக்கும். மேலும், color grading எளிதாகவும் சிறப்பாகவும் செய்வதற்கு, 10-bit 4:2:2 format முக்கியமானது. இந்த format, நிறங்கள் மற்றும் வெவ்வேறு shades மெல்லிய மாறுபாடுகளைத் துல்லியமாகப் பதிவு செய்ய உதவும். இவை அனைத்துக்கும் FX30-யில் உள்ளது. ஆகையால் FX30 மிகவும் பயனுல்லதாக இருக்கும் என்பதில் அய்யம் இல்லை.

செலவு பற்றி கவலை இல்லை, மேலும் திறன் கொண்ட கேமரா விரும்பினால், A7SIII உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். நான்கு லட்சத்தை விரையம் செய்ய விரும்பமாட்டேன் என்றால் FX30 யே பேகலாம்.

நாம் இப்போ வீடியோ தான் முக்கிய வேலை என்கிறோம் என்றால், FX30 உங்களுக்கு மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். இது குறைந்த செலவில் சிறந்த சினிமாட்டிக் தொழில்நுட்பம் வழங்கும் மற்றும் நல்ல வீடியோ குவாலிட்டி தரக்கூடியது. அதனால், உங்களின் videography தேவைகளுக்கு Sony FX30 மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

Top 3 Budget Canon Lenses பற்றய எங்கள் பதிவை பார்க்க:

Learn More யை Click செய்யவும்

Share

Leave a Reply