My V3 Ads என்ற நிறுவனம் ஒரு மோசடி நிறுவனம்தானா? இது முதலீட்டாளர்களுக்கு உண்மையான லாபத்தை தருகிறதா? இது ஒரு MLM (Multi Level Marketing) திட்டமா? இந்த பதிவில் முலுமையக பார்க்கலாம்.
யார் இந்த My V3 Ads?
விஜயராகவன் மற்றும் சக்தி ஆனந்த் ஆகியோர் 2020ல் கோயம்புத்தூரில் My V3 தொடங்கினர். சக்தி ஆனந்த் தான் நிறுவனர் என்று கூறப்படுகிறது?
இந்நிருவணம் 2020-ல் இருந்து செயல்பட்டு வந்தாலும், 2023-ல் தான் இது பரவலாக கவனிக்கப்பட்டது, சமீப காலமாக தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது.
குறைந்த வேலை, அதிக வருமானம் என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஈர்க்கிறது.
Table of Contents
எப்படி இயங்குகிறது?
பொருட்கள் விற்பனை
பெரும்பாலும் ஆயுர்வேத மாத்திரைகள், உடல்நலம், அழகு அல்லது வாழ்க்கை முறை சார்ந்த நன்மைகளை வழங்கும் பொருட்களின் விநியோகஸ்தர் போல், தன்னை காட்டிக் கொள்கிறது.
வருமாணம்
ஆரம்பத்தில் உயர்ந்த வருமானம், குறைந்த வேலை என கவர்ச்சிகரமான தகவல்களைக் கொடுத்து உங்களை ஈர்க்கும். புதிய உறுப்பினராக சேர உங்களுக்கு பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
எவ்வாறென்றால், நீங்கள் அவர்களிடம் ஏதாவது பொருட்களை முதலில் வாங்க வேண்டும், அதுமூலம் மட்டுமே நீங்கள் உருப்பினர் ஆகமுடியும், இதுவே அவர்களின் முதன்மையான சட்டம்.
நீங்கள் My V3 Ads செயலியில் விளம்பரங்களை பார்த்தால் பணம் தருவதாக சொல்கிறார்கள்,
Membership திட்டங்கள்
- Opening Member – (OM): இது இலவச உறுப்பினர் திட்டம். இதில் நீங்கள் எந்த முதலீடும் செய்ய வேண்டியதில்லை. ஆனால், கிடைக்கும் லாபம் மிகவும் குறைவு.
- Basic Member – (BM): இந்த திட்டத்தில் சேர சிறிய தொகையை செலுத்த வேண்டும். இதில் கிடைக்கும் லாபம் இலவச உறுப்பினர் திட்டத்தை விட சற்று அதிகமாக இருக்கும்.
- Silver Member – (SM): இந்த திட்டத்தில் சேர அதிக தொகையை செலுத்த வேண்டும். இதில் கிடைக்கும் லாபம் மேலும் அதிகரிக்கும்.
- Gold Member – (GM): இதில் சேர, நீங்கள் 1,20,000 செலுத்தி Capsules வாங்க வேண்டும். இதில் கிடைக்கும் லாபம் மற்றும் கமிஷன் அதிகமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என மற்றவர்களை My V3 Ads யில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் உங்களை ஊக்குவிக்கின்றனர். நீங்கள் யாரை சேர்க்கிறீர்களோ, அவர்கள் எடுக்கும் Membership Plan-யை பொருத்து உங்களுக்கு கூடுதல் கமிஷன் கிடைக்கும்.
My V3 Ads ஒரு நாளைக்கு அதிகபட்சம் ₹1800 வரை சம்பாதிக்க முடியும் என்று கூறுகிறது.
ஏன், இது ஒரு மிகப்பெரிய மோசடி?
My V3 யில் உண்மையான லாபம் என்பது விளம்பரங்கள் மூலமாக நிச்சயம் இல்லை. புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மூலமே லாபம் ஈட்ட முடியும்.
My V3 ஒரு MLM திட்டம் என்பதால் நீங்களும் அவர்களின் Capsules-யை மற்றவர்களிடம் விற்று அதன் மூலமாக உங்கள் லாபத்தை அதிக படுத்த செய்யவீர், இப்போது நீங்கள் அறிமுகம் செய்தவரும் இதையே செய்வார்கள், MLM திட்டங்கள் நிலைத்து இயங்க முடியாதவை, மற்றும் நீங்கள் விற்கும் பொருட்களும் தரமற்றதாள், ஒரு கட்டத்தில், புதிய உறுப்பினர்கள் சேர்வது நின்று போய்விடும். MLM முறையின் நுணுக்கங்களை அறியாதவர்கள், இதில் சுலபமாக பணத்தை இழக்க நேரிடலாம்.
ஒரு Operation செய்தாலே 1,20,000/- செலவு ஆவதில்லை, நீங்களோ, 1,20,000/-க்கு மாத்திரையை வாங்கி, நோயே வராத நிலையிலும் அதை உபயேக படுத்துவீர்கள்.
சிந்தியுங்கள் சகோதர, சகோதரிகளே!
விழிப்புணர்வு இல்லாத பாமர மக்களையே இதற்கு இலக்காகக் கொள்கிறது இந்நிறுவனம்.
தற்போதைய இளைஞர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் மத்தியில், பொருளாதாரத்தில் மிகவிரைவில் முன்னேற வேண்டும் என்ற ஆசையால், எதைப்பற்றியும் கவலை இல்லாமல் இது போன்ற ஏமாற்று பேர்வழிகளின் வளையில் எளிதாக சிக்குகிறார்கள்.
My V3-யின் தற்போதய நாடகம்
பணச் சுழற்சி முறை
புதிய உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் பணம், பழைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஒரு பணச் சுழற்சி முறை (Ponzi Scheme) ஆகும்.
தற்போது, My V3 Ads-ல் புதிய உறுப்பினர்கள் சேர்வது குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய உறுப்பினர்கள் சேர்வது குறைந்தால், பணம் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
Settlement நிருத்தம்
தேர்தல் ஆணையம் அனைத்து பணப் பரிவர்த்தனைக்கும் தடை விதித்ததாக பொய்யான தகவல்களையும், KYC சரிபார்ப்பை My v3 Ads செயலியில் கொண்டுவர காலதாமதம் ஆகும் என்று சொல்லி, Member-களின் Settlement-யை தற்போது நிருத்தி உள்ளார்கள்.
விஜயராகவன் காட்டிய போலி சான்றிதழ்கள்
காவல்துறை விசாரணையில், விஜயராகவன் சமர்ப்பித்த கல்விச் சான்றிதழில் சில முரண்பாடுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அவர் போலிச் சான்றிதழ் வைத்திருந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் குழப்பத்தையும் மோசடி செய்யப்பட்டதாக உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அசோக் ஸ்ரீநிதி My V3 Ads -க்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள்
அசோக் ஸ்ரீநிதி, பாமக கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர், My V3 Ads நிறுவனத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இது ஒரு பணச் சுழற்சி முறை (Ponzi Scheme) என்றும், பாமர மக்களை ஏமாற்றி பணத்தை பறிக்கும் முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். இதுவரை அவர் எடுத்த முக்கிய நடவடிக்கைகள்:
இந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நிறுவனத்தின் மோசடித் தனத்தை மக்களிடம் எடுத்துரைத்து, அவர்களை எச்சரிக்கும் விதமாக பேச்சுக்கள் மற்றும் சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களை காவல் நிலையத்தில் புகார் அளிக்க ஊக்குவித்து வருகிறார்.
அசோக் ஸ்ரீநிதியின் பதிவுகள் பார்க்க: (வீடியோ Link)
My v3 ads “FIR” முழு விளக்கம்: M.Alagar Samy-Advocate : See Video
My V3 Ads-யின் தற்போதைய நிலை
My V3-யின் தற்போதைய நிலை:
- நிறுவனத்தின் மீது புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து, காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
- நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்படலாம் என்ற அபாயம் உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்:
- உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்.
- My V3 -ல் சேர்ந்து பணத்தை இழந்தவர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் மட்டுமே உங்கள் பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க முடியும்.
ஏமாற்று கம்பெனிகளை எப்படி கண்டுபிடிப்பது?
எச்சரிக்கை!
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை மனிதர்களுக்கு இயல்பானதுதான். ஆனால், சிலர் இந்த வாய்ப்பை தவறாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். “சுலபமாக பணம் சம்பாதிக்கலாம்”, “குறைந்த வேலை, அதிக வருமானம்” போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, மக்களை தங்கள் வலையில் விழ வைக்கின்றன.
எப்படி கண்டுபிடிப்பது?
- அதிக லாபம் வாக்குறுதி: “குறுகிய காலத்தில் அதிக லாபம்”, “எந்த ரிஸ்க்கும் இல்லாமல் பணம் சம்பாதிக்கலாம்” போன்ற வாக்குறுதிகளை அளிக்கும் கம்பெனிகளை நம்ப வேண்டாம்.
- தெளிவற்ற திட்டம்: தங்கள் திட்டம் பற்றி தெளிவான விளக்கத்தை அளிக்காத கம்பெனிகளை நம்ப வேண்டாம்.
- அதிக அழுத்தம்: உடனடியாக சேர வேண்டும், இல்லையெனில் வாய்ப்பு இழந்துவிடும் என்று அதிக அழுத்தம் கொடுக்கும் கம்பெனிகளை நம்ப வேண்டாம்.
- பணம் செலுத்த வேண்டும்: சேர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கேட்கும் கம்பெனிகளை நம்ப வேண்டாம்.
- தெரிந்து கொள்ளுங்கள்: எந்த கம்பெனியிலும் சேர்வதற்கு முன், அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். இணையதளத்தில் தேடி, மற்றவர்களின் அனுபவங்களை படித்து, அரசாங்க அனுமதி இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்.
- ஆலோசனை கேளுங்கள்: உறவினர்கள், நண்பர்கள், நிதி ஆலோசகர்கள் போன்ற நம்பகமானவர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள்.
- குறிப்புகள் எடுத்துக் கொள்ளுங்கள்: கம்பெனி officials உங்களுக்கு என்ன சொன்னார்கள் என்பதை குறிப்புகள் எடுத்துக் கொள்ளுங்கள்.
- புகார் அளியுங்கள்: ஏமாற்றப்பட்டால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்.
பணம் சம்பாதிக்க ஆசைப்படுவது தவறல்ல. ஆனால், சரியான வழியில், நம்பகமான கம்பெனிகளில் முதலீடு செய்வது முக்கியம். எச்சரிக்கையுடன் இருந்து, ஏமாற்று கம்பெனிகளில் சிக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
For GK Review News and Reviews, click here for more information.
[…] For more information on how this scam unfolded and tips on safeguarding yourself, check out my previous blog post: My V3 Ads: The Biggest Scam of 2024. […]