Menu

உலக உணவின் உயிரான நெல்லைக் காப்போம், இயற்கையுடன் இணைவோம், சுவை மிகுந்த பாரம்பரியத்தை கற்றுக்கொள்ள ஒர் அரிய வாய்ப்பு!

நெல்தான் உலக மனிதர்களின் முதல் உணவு, உணவு இல்லாமல் மனித உயிர்கள் இல்லை, சிறந்த உணவுதான் மனிதனை வளமாக்கி உரமூட்டுகின்றது, அப்படியான சிறந்த உணவு என்பது நெல் உணவே ஆகும், அந்த நெல்லின் வகைகள் பல, அவைகளில் சிறந்தது, தூயது எது? கண்டறிந்து உண்டு உயிர் வளர்ப்போம்.

மனிதன் கண்ட பேரமுது

நாடோடிகளாகத் திரிந்து வந்த மனிதஇனம் விலங்குகளை மட்டுமே உணவாக உண்டு வந்தது, உழவைக் கண்டுபிடித்தபின் அவன் நிலையான குடியானான், அதன்பிறகு பல தானியங்களைக் கண்டுபிடித்தது மனிதகுலம், உணவுக்காக விலங்குகளைத் தேடித்திரிந்து உண்ணும் வாழ்க்கை மாறியது, பல தானியங்களை கண்டுபிடித்த மனிதன் மிக அபூர்வமான தானியம் ஒன்றை இயற்கையில் இருந்து கண்டடைந்தான்.

காடுகளில் இருந்து “மூங்கில் நெல்” போன்றவற்றைக் கண்டறிந்தான், பின் பலவகையான நெற்களைக் கண்டுபிடித்தான், ஒவ்வொரு நெல்லும் உயிர்களுக்குப் பலவிதமான ஊட்டச்சத்துகளாய் அமைந்தது, அதன் பின் மானுட வாழ்வில் நெல்லே முதன்மையான உணவானது, நெல்லே மனித உயிர் வளர்க்கும் மகத்துவமானதாய் மாறியது.

மானிடனுக்கு புவிதனில் பூத்த

அமுத மணியே!

உன்னை உண்ட பிறகு

உயிர்கள் ஊறி வளர்ந்தது!

தரணியைக் காக்கின்ற

கடவுளின் ஒளிமணி நீ!

மனித குலம் செய்த தவத்தால்

பெற்ற பெருவரம் நீ!

சேற்றில் புதைந்து

பூத்து வந்த புதையல் நீ!

நீ இல்லை என்றால்

உயிர் குலம் ஏதுமில்லை.

நெல்லே உயிரின் அமுதமே!..

தமிழ் பேசிய நெல்

தமிழகத்தில் தோன்றிய நெல்லானது உண்ணும் நிலையில் அரிசி என்ற பெயர் கொண்டது, அரிசியானது உலகமெங்கும் சென்றது, உலகம் எங்கும் சென்றாலும் அதன் தமிழ் பெயரே பல மொழிகளிலும் உள்ளது, இன்று ஆங்கில மொழியில் (Rice) என்பது அரிசி என்ற சொல்லின் மூலத்திரிபே ஆகும்.

உலக மக்கள் எல்லோரும் சுவைத்து உண்டு உண்டு நெல்லைப் போற்றி “ரைஸ், ரைஸ்” என்று வழங்கினாலும் அது சிதையாத தமிழ் மொழியின் பண்பாட்டை உலகமெல்லாம் காட்டி நிற்கின்றது, அரிசியானது கோட்டையில் வாழ்வோருக்கும் குடிசையில் வாழ்பவருக்கும் பேதமின்றி உணவாக உயிர் காக்கின்றது, நெல்மணி மலரும் போதெல்லாம் எங்கேயோ ஒரு உயிர் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

மாளிகைவாசிக்கும்

மண்குடிசைவாசிக்கும்

மாற்றில்லா அமுதம் நீ!

நெல்மணி ஓசை கேட்கா வீடொன்றில்லை

என் மண்ணில் பிறந்து

பூமி பந்தெல்லாம் பரந்தவளே!

அரிசியில் தமிழ் பேசிய நீ!

ரைஸாகி உருக்கொண்ட

என் பண்பாட்டின் மூலமே,

நீ சிரிக்கின்றாய்!

உயிர்கள் தளிர்க்கின்றன

பந்தியில் உன் பரிமாற்றம்

உண்ணும் வயிறுகள்

உவகையில் தொந்தி

விழுந்து சிரிக்கின்றது!

நெல்லே உலகின் உணவே!…

உயிர்களின் ஒளிவிளக்கே

நெல்மணி இல்லாமல் மனித உயிர்கள் இல்லை, அப்படியான மனித உயிர்களுக்கு உயிர் வளர்க்கும் அதிசயமாகவும் பெருவிருந்தாகவும் உள்ள நெல்லை இன்று பலவிதக் கலப்பினமாக்கி, அதன் சத்துக்களை இழக்கவிட்டு நஞ்சுபோல் மாற்றிவிட்டனர்.

 

முழுமையான பலவித சத்துக்கள் அனைத்தும் நமது பாரம்பரியமான நெல் வகைகளிலேயே உள்ளது, பாரம்பரிய நெல் வகைகள் ஒவ்வொன்றிலும் பெரும் உயிர்ச்சத்து உள்ளது, அது புற்றுநோய் போன்ற பெரும் நோய்களை நீக்கும் ஆற்றல் வாய்ந்தது, அதற்கு நம் பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதை உண்ண வேண்டும், அந்த நெல்வகைகள் என்ன என்பதும், அது எங்கே எப்படி கிடைக்கும் என்பதற்கும் விடைகாண

இதோ நமக்கு வழிகாட்டி உயிர் வளர்க்க அழைக்கின்றது ஈசா மண் காப்போம் அமைப்பு.

நெல்லே பூமியின்

அதிசயமே!

புலன்களின் பெருவிருந்தே

பொங்கும் பானையின்

பூ விருந்தே!

ஆயிரம் ஆயிரம்

வகை கொண்ட

அற்புதமான உயிர்களின்

ஒளி விளக்கே!..

ஈசாவின் பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா 2024

28 ஜூலை (ஞாயிறு) | ஸ்ரீ நாராயணி மஹால், கோல்டன் டெம்பிள், ஸ்ரீபுரம், வேலூர்,

நேரம்: 10am-5pm

முன்பதிவு செய்ய: https://forms.gle/CfzEy8KTEN2uHfrJ8

அல்லது அழைக்கவும்

+91 830 009 3777    |     +91 944 259 0077

இந்த பயிற்சிக்கான  வாட்ஸ் ஆப் குழு லிங்க்

https://chat.whatsapp.com/DOv62g3UC1jJjNw975gOCr

திருவிழாவின் முக்கிய அம்சமாக

  • இயற்கை சந்தை…
  • 50க்கும் மேற்பட்ட கடைகளில் பாரம்பரிய அரிசிகள், காய்கறிகள், நாட்டுக் காய்கறி விதைகள், மரபு திண்பண்டங்கள், தேன் வகைகள், பயிறு வகைகள் மற்றும் பல மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்
  • நம் குடும்ப ஆரோக்கியத்திற்கு தேவையான இயற்கை உணவுகள் கிடைக்கும்.
  • விதை நெல் இலவசமாக வழங்கப்படும்

  • பாரம்பரிய அரிசியில் ஐஸ்கிரீம் வகைகள்

முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் பங்கு பெரும் மாபெரும் நிகழ்வு

  1. கேரள மாநில விருதுகளை குவித்துள்ள பாரம்பரிய நெல் விவசாயி திருமதி. புவனேஸ்வரி, பாலக்காடு, கேரளா
  2. நேரடி விற்பனையில் சாதித்த விவசாயி திரு. பப்பா ராவ், குண்டூர், ஆந்திரா
  1. கால்நடைகளுக்கு மூலிகை மருத்துவம் டாக்டர் திரு. புண்ணியமூர்த்தி, மரபு வழி கால்நடை மருத்துவர்
  1. பூச்சிகளால் அதிகரிக்கும் நெல் மகசூல் திரு. பூச்சி நீ. செல்வம், பூச்சியியல் வல்லுநர்
  1. பாரம்பரிய அரிசியில் மதிப்பு கூட்டல் வாய்ப்புகள் டாக்டர். புவனா, தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் (NIFTEM), தஞ்சாவூர்
  1. நெல் வயலில் மீன் வளர்த்து அசத்தும் புதுமையான விவசாயி திரு. பொன்னையா, முன்னோடி விவசாயி, புதுக்கோட்டை
  1. பாரம்பரிய அரிசியில் மதிப்பு கூட்டல் மூலம் தொழிலதிபரான விவசாயி திரு. தினேஷ், நிறுவனர் தான்யாஸ், மதுரை
  2. 60 ஏக்கரில் பாரம்பரிய நெல் சாகுபடி, அசத்தல் வருமானம் திரு. வீரராகவன், முன்னோடி விவசாயி, காஞ்சிபுரம்.

“சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா” ஈஷாவின் தனித்துவமான இசைக் குழுவின் மண் சார்ந்த இசை நிகழ்ச்சி நடைபெறும்”

  • விவசாய கருவிகள், நாட்டு காய்கறி விதைகள், நெல் ரகங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை
  • மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்.
  • பாரம்பரிய அரிசியில் மதிய உணவு. விதை நெல் இலவசமாக வழங்கப்படும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

                                                    – குறள் 1038

Is Another Financial Crisis Looming? 4 Simple Strategies for Safeguarding Your Finances

Learn More

Leave a Reply